தமிழ்நாடு செய்திகள்

Karur Stampede| சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று மாலை டெல்லி புறப்படுகிறார் விஜய்

Published On 2026-03-14 07:25 IST   |   Update On 2026-03-14 07:25:00 IST
  • பாஜக கூட்டணியில் விஜய் இணையலாம் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
  • தவெக தலைவர் விஜய், பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை 3 மணிக்கு தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறார்.

கரூர் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராகும் நிலையில் இன்று புறப்படுகிறார்.

ஏற்கனவே 2 முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் விஜய் மீண்டும் நாளை விசாரணைக்கு ஆஜராகிகறார்.

இதற்கிடையே, விஜய் டெல்லி செல்லும் விஜய் பாஜக தலைவர்களை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசுவாரா என எதிர்பாரக்கப்படுகிறது.

பாஜக கூட்டணியில் விஜய் இணையலாம் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகிறது. கூட்டணி செய்தி உண்மை எனில் தவெக தலைவர் விஜய், பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டணி குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் டெல்லி பயணம் செய்வதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

Tags:    

Similar News