தமிழ்நாடு செய்திகள்

Iran War | போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

Published On 2026-03-14 07:25 IST   |   Update On 2026-03-14 07:25:00 IST
  • சன்பிளவர் ஆயில் முன்பு ஒரு லிட்டர் ரூ.155-க்கு விற்கப்பட்ட சூழலில் இப்போது ரூ.170-க்கு விற்கப்படுகிறது.
  • சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த 2 வாரத்தில் மட்டும் உயர்ந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றன.

இந்நிலையில் போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்திருப்பதாக மொத்த வியாபாரி கொளத்தூர் சாலை வியாபாரி முன்னேற்ற சங்க பொருளாளர் அமிர்தராஜ் தெரிவித்தார்.

குறிப்பாக, வீட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தக் கூடிய சூரிய காந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) முன்பு ஒரு லிட்டர் ரூ.155-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.170-க்கு விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் இதன் விலை ரூ.175 வரை விற்கப்படுகிறது.

இதேபோல், பாமாயில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.110-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.122 வரை மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் இதைவிட லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை அதிகரித்து விற்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த 2 வாரத்தில் மட்டும் உயர்ந்துள்ளது.

இதுதவிர, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.

Tags:    

Similar News