தமிழ்நாடு செய்திகள்

அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அடைந்த சென்னை - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

Published On 2026-03-13 21:29 IST   |   Update On 2026-03-13 21:29:00 IST
  • ஐந்து ஆண்டுகளில் சென்னையின் தோற்றம் ஏற்றம் பெற்றிருக்கிறது.
  • உலகத்தர உட்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக 2030-இல் வளர்த்தெடுப்போம்

சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் திமுக அரசு சாதித்து காட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

  • பாலங்கள் – 36 (முடிவுற்றவை 19, நடைபெறுபவை 17)
  • பூங்காக்கள் மேம்பாடு – 236 பணிகள்
  • மழைநீர் வடிகால்கள் – 1,442 கிலோமீட்டர்
  • பள்ளிகள் மேம்பாடு – ரூ. 533 கோடி
  • குடிநீர்த் திட்டப் பயன்பாடுகள் – ரூ. 5,447 கோடி
  • சாலைகள் மேம்பாடு – 3,455 கிலோமீட்டர்
  • வடசென்னை வளர்ச்சித் திட்டம் - சுமார் 7,000 கோடி ரூபாய் 

இவை தவிர, பல்வேறு முதல்வர் படைப்பகங்கள், விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டுத் திடல்கள், நவீன வசதிகளுடன் கூடிய திருமண மாளிகைகள், புத்தம்புதிய வடிவமைப்பிலான பேருந்து நிலையங்கள், தாழ்தள மின் பேருந்துகள் எனச் சென்னையின் தோற்றம் ஏற்றம் பெற்றிருக்கிறது.

இன்னும் செய்வோம், உலகத்தர உட்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக 2030-இல் வளர்த்தெடுப்போம்!" என்றுக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News