தமிழ்நாடு செய்திகள்

ஏழை கல்யாணத்துக்கு விஜய் போயிருக்காரா?... இப்படிப்பட்ட மனநிலை அவருக்கு இருக்கு - ஜெயக்குமார்

Published On 2026-03-03 08:14 IST   |   Update On 2026-03-03 08:17:00 IST
  • விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்தார்.
  • விஜயை அதிமுக அத்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். திமுகவின் மீது கடுமையாகந விமர்சனங்களை முன்வைத்து வரும் விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்தார்.

இதையடுத்து விஜயை அதிமுக அத்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவ்வகையில் சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விஜயை கடுமையாக தாக்கி பேசினார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஜெய்குமார், "விஜய் பணக்காரங்க வீட்டு கல்யாணத்துக்குதான் போவார்.. எங்கையவது ஏழை வீட்டு கல்யாணத்துக்கு போயிருக்காரா? பெரிய பெரிய கோடீஸ்வரங்க வீட்டுக்குதான் அவர் போவார்

7 தயாரிப்பாளர்களை விஜய் உருவாக்கியிருக்கிறார். ஆனால் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்த தன் தந்தையை ஏன் ஒரு தயாரிப்பாளர் ஆக்கவில்லை? இப்படிப்பட்ட மனநிலை அவருக்கு இருக்கு" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News