தமிழ்நாடு செய்திகள்
கோட்டூர்புரம் அருகே கார்கள் மோதி விபத்து - சட்டக்கல்லூரி மாணவி உயிரிழப்பு
- சாலையில் முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால் இரு கார்களும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சட்டக்கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
கோட்டூர்புரம் சாலையில் முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால் இரு கார்களும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜூனு (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட காயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.