த.வெ.க-வில் இணைந்த செங்கோட்டையன் முடிவு நல்லதுதான்: சசிகலா
- ஓ. பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்தது துரதிருஷ்டவசமானது.
- செங்கோட்டையன் எதிரிகிட்டயும் போகவில்லை. துரோகிகள்கிட்டயும் போகவில்லை.
அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் பொதுச் செயலாளராக உள்ளார். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலா தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
ஆனால் ஓ. பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்துள்ளார். அவர் திமுக-வில் இணைந்தது துரதிருஷ்டவசமானது. அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என்று சசிகலா கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதிமுக-வின் சீனியர் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். 2-ம் கட்ட தலைவர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.-க்களும் திமுக-வில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் செங்கோட்டையன் குறித்து சசிகலா கூறுகையில் "செங்கோட்டையன் எதிரிகிட்டயும் போகவில்லை. துரோகிகள்கிட்டயும் போகவில்லை. புதிதான ஒரு இடத்துக்கு போயிருக்கிறார். அதுவரைக்கும் அவரின் முடிவு நல்லது என்பதுதான் என் கருத்து" என்றார்.