தமிழ்நாடு செய்திகள்

ஈரான் உச்ச தலைவர் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டம்

Published On 2026-03-02 12:17 IST   |   Update On 2026-03-02 12:17:00 IST
  • ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை படுகொலை செய்யப்பட்டார்.
  • இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அடுத்த தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை படுகொலை செய்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் மெழுகு வார்த்தி ஏந்து பேராணியாக சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனித மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் யாக்கூப் தலைமை தாங்கினார்

தாம்பரம் ஜூம் ஆ பள்ளிவாசலில் இருந்து, பாரதி திடல் வரை பேரணியாக வந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அமெரிக்காவிற்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு எதிராக கண்டன் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜாகீர் உசேன் மனிதநேய மக்கள் கட்சியை நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 

Tags:    

Similar News