தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

Published On 2026-03-02 10:05 IST   |   Update On 2026-03-02 10:05:00 IST
  • பிளஸ்-2 தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.
  • இன்று தொடங்கிய பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும் தனித்தேர்வர்கள் 27,783 பேரும் எழுதுகின்றனர். 7545 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 3412 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுதுகின்றனர். இன்று தொடங்கிய பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

பிளஸ்-2 பொதுத்தேர்வினை 4540 பறக்கும் படையினர் கண்காணிக்கிறார்கள். 44 ஆயிரத்து 624 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வு மையத்தில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. ஆள் மாறாட்டம், விடைத்தாள் மாற்றுதல், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் தேர்வு எழுதுவதற்கு 3 ஆண்டு காலம் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்றும் 94983 83075, 94983 83076 எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News