தமிழ்நாடு செய்திகள்

அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை: NDA கூட்டணியில் இணைகிறாரா சசிகலா? - இ.பி.எஸ். விளக்கம்

Published On 2026-03-03 09:05 IST   |   Update On 2026-03-03 09:05:00 IST
  • புதிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது.
  • அ.தி.மு.க. கூட்டணி சுமூகமாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.

டெல்லியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

* தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசினேன்.

* தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விவாதித்தேன்.

* புதிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது.

* அ.தி.மு.க. கூட்டணி சுமூகமாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.

* சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விவாதிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News