தமிழ்நாடு செய்திகள்

கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல்... - விஜயை மறைமுகமாக சீண்டிய உதயநிதி

Published On 2025-09-15 06:57 IST   |   Update On 2025-09-15 06:57:00 IST
  • 2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம்
  • அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும்.

துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை தென்மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலாப்பூர்- தியாகராய நகர் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வட்ட, பாக திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.

கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், அதற்கு இளைஞர் அணி ஆற்றிவரும் பணிகளை எடுத்துக்கூறியும் உரையாற்றினோம்.

2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!" என்று தெரிவித்துள்ளார்.

'அரசியல் புரிதல் இல்லாமல் கூச்சல் எழுப்பும் கூட்டம்' என்று த.வெ.க. தொண்டர்களை தான் திமுகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் விஜயை உதயநிதி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Tags:    

Similar News