TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
- மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
- மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி நான் அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். இதற்கு காரணம் 30 வருடத்திற்கு மேல் என்னுடன் நீங்கள் நிற்கிறீர்கள். அதற்கான நன்றி கடன் தான் இது. உங்களுடன் உண்மையாக நின்று சேவை செய்ய உங்கள் விஜய் நான் வருகிறேன். சொல்ல அல்ல செயல் தான் முக்கியம்" என்று தெரிவித்தார்.
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "பெண்களுக்கு ஆயிரம் கொடுத்துவிட்டால் போதுமா, அவர்களுக்குப் பாதுகாப்பே இல்லை எனக் கதறுகிறார்கள். அது கேட்கிறதா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பரந்தூர், மீனவர்கள் என அனைவரையும் ஏமாற்றுகிறீர்கள். ஆனால், எந்தப் பதிலும் இவர்களிடம் இருந்து வராது" என்று தெரிவித்தார்.
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியின் லட்சணத்தைப் பார்த்துவிட்டு நாம் எப்படி சும்மா இருக்க முடியும். ஒரு தவறு செய்தால் அதனைத் தெரிந்து செய்தால் அது கபட நாடக மு.க. ஸ்டாலினாகவே இருந்தாலும், மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள். ஆட்சியில் நேர்மை, ஊழல் இல்லை என சொல்ல முடியுமா?" என்று தெரிவித்தார்.
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "கீழடி நாகரிகத்தை மறைக்க நினைக்கிறீர்கள். தமிழ்நாட்டைத் தொட்டால் என்ன நடக்கும் என பல உதாரணங்கள் இருக்கிறது" என்று பாஜகவை விமர்சித்து பேசினார்.