தமிழ்நாடு செய்திகள்

TIGER Vs LION... சிங்கம் கெட்டுப்போன உணவை கூட தொடாது - சீமானை சீண்டிய விஜய்

Published On 2025-08-21 21:15 IST   |   Update On 2025-08-21 21:15:00 IST
  • த.வெ.க. மதுரை மாநாடு இன்று நடைபெற்றது.
  • சிங்கம் அவ்வளவு சீக்கிரம் யாரையும் தொடாது, தொட்டால் விடாது என்று விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்றது.

மாநாட்டில் மக்களிடம் உரையாற்றிய விஜய், "சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிமீ தூரம் சத்தம் கேட்கும். சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். பசியிலேயே இருந்தாலும், இறந்த, கெட்டுப்போன உணவைத் தொடக்கூட செய்யாது. காட்டில் எல்லை வகுத்து காட்டையே தனது கட்டுப்பாட்டில் சிங்கம் வைத்திருக்கும். சிங்கம் அவ்வளவு சீக்கிரம் யாரையும் தொடாது, தொட்டால் விடாது. சிங்கத்திற்குத் தனியாகவும், கூட்டமாகவும் வரத் தெரியும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சிங்கம் பசியிலேயே இருந்தாலும், இறந்த, கெட்டுப்போன உணவைத் தொடக்கூட செய்யாது என்று விஜய் பேசியது சீமானை பற்றி தான் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

முன்பு விஜயை புகழந்து பேசி வந்த சீமான் தற்போது த. வெ.க. கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இது அக்கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது.

அதுவும் அண்மையில், நாங்கள் புலிகள், அதனால் அணில்கள் குறுக்கே ஓடவேண்டாம் என்று த. வெ.க. தொண்டர்களை சீமான் விமர்சித்திருந்தார்.

சீமான் புலி கதை கூறிய நிலையில், விஜய் சிங்கம் கதை கூறியுள்ளார். இதன்மூலம் சீமானின் விமர்சனத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதைத்தான் விஜய் கூறியுள்ளார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

Tags:    

Similar News