தமிழ்நாடு செய்திகள்

உற்பத்தி செலவு அதிகரிப்பால் பனியன் ஆடைகள் விலையை 5 சதவீதம் உயர்த்த திட்டம்

Published On 2025-12-06 15:14 IST   |   Update On 2025-12-06 15:14:00 IST
  • தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது.
  • பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை.

திருப்பூர்:

திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) கலந்துரையாடல் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறுகுறு தொழில்களில் ஜாப் ஒர்க்கிற்கான பணத்தை 45 நாட்களுக்குள் வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

அதேபோல் ரீடெய்லர்களும் பணத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது. மேலும் பனியன் ஆடைகளின் விலையை உயர்த்தி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை விலையை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை. அவர்களை பிளாக் லிஸ்ட்டில் (கருப்பு பட்டியல்) கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News