தமிழ்நாடு செய்திகள்

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?- நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கனிமொழி கேள்வி

Published On 2025-12-06 15:14 IST   |   Update On 2025-12-06 15:14:00 IST
  • அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
  • சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா?

தமிழ்நாடு அயோத்தி போல மாறுவதில் தவறில்லை என பேசிய நயினார் நாகேந்திரனுக்கு திமுக எம்பி கன

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்," திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?

கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?

கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News