தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியை தாக்க திட்டமா? சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய் - காங்கிரஸ் எம்.பி. சுதா

Published On 2026-02-05 16:16 IST   |   Update On 2026-02-05 16:16:00 IST
  • ராகுல் கூறும் கருத்துக்களுக்கு ஆளும்கட்சியினர் பதிலளிக்க வேண்டும்.
  • ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்துக்கு உள்ளே அமர்ந்து போராடினோம்.

மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சுதா, "மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் குற்றச்சாட்டு மிகப்பெரிய பொய். ராகுல் கூறும் கருத்துக்களுக்கு ஆளும்கட்சியினர் பதிலளிக்க வேண்டும்.

ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்துக்கு உள்ளே அமர்ந்து போராடினோம்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News