தமிழ்நாடு செய்திகள்

கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-04-03 20:04 IST   |   Update On 2025-04-03 20:04:00 IST
  • கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது.
  • மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்.

திமுக கூட்டணியில் பிளவு ஏற்படாதா என நினைத்து கொண்டிருப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்நடில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் காரணமாக தூங்கா நகரமான மதுரை சிவப்பு நகரமாக மாறியுள்ளது.

கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது.

கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மத்திய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்வரும்தான். எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம்.

மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறார்கள். மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள். வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள்.

கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News