தமிழ்நாடு செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார் - பியூஷ் கோயல்

Published On 2026-01-21 12:32 IST   |   Update On 2026-01-21 12:35:00 IST
  • ஊழல் நிறைந்த தி.மு.க. அரசை அகற்ற ஒன்றாக இணைந்துள்ளோம்.
  • தமிழக மக்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் தி.மு.க. தாக்குகிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக டி.டி.வி.தினகரன் சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற டி.டி.வி. தினகரன், பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அவர் சந்தித்தார். அப்போது டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இதையடுத்து பா.ஜ.க. - அ.ம.மு.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

* பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்ததில் மகிழ்ச்சி.

* தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.

* ஊழல் நிறைந்த தி.மு.க. அரசை அகற்ற ஒன்றாக இணைந்துள்ளோம்.

* தி.மு.க.வின் ஊழல்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும்.

* தமிழக மக்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் தி.மு.க. தாக்குகிறது.

* டி.டி.வி.தினகரனின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News