தமிழ்நாடு செய்திகள்

Strait of Hormuz | திருப்பூரில் தேங்கி கிடக்கும் ரூ.300 கோடி மதிப்புள்ள ஆடைகள்

Published On 2026-03-12 16:26 IST   |   Update On 2026-03-12 16:26:00 IST
  • கப்பல்கள் மாற்று பாதையில் சுற்றிச்செல்ல 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும்
  • பதற்றமான சூழலில் சரக்கை அனுப்ப வேண்டாமென, வர்த்தகர்கள் கூறிவிட்டனர்.

ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து தடையால் திருப்பூர் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியான ரூ. 300 கோடி மதிப்பிலான ஆடைகள் திருப்பூரிலேயே தேக்கமடைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், துபாய் வழியாக அரபு நாடுகளுக்கு செல்லும் பின்னலாடைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி பாதையை அடைத்து வைத்துள்ளதால் கப்பல்கள் மாற்று பாதையில் சுற்றிச்செல்ல 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும். இதனால் செலவுகள் அதிகரிக்கும்.

பதற்றமான சூழலில் சரக்கை அனுப்ப வேண்டாமென, வர்த்தகர்கள் கூறிவிட்டனர். ரம்ஜான் பண்டிகை விற்பனைக்கான ஆடைகளை கடந்த மாதங்களில் அனுப்பிவிட்டோம் என்றார்.

திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், "பிரின்டிங், சாய ஆலைகள், 'ஹீட் செட்டிங்' 'பினிஷிங்', சென்டர் போன்ற பிரிவுகளில், கியாஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பின்னலாடை தயாரிப்பில் கியாஸ் பயன்பாடு தவிர்க்க இயலாதது.

கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில 'ஜாப் ஒர்க்' பிரிவுகளில் உற்பத்தி முடங்கும் அபாயம் உள்ளது. மின்சாரத்தை பயன்படுத்தினால் உற்பத்தி செலவு அதிகரிக்கும். பின்னலாடை தொழில்துறையினருக்கு தடையின்றி கியாஸ் கிடைக்க மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News