தமிழ்நாடு செய்திகள்

Vandalur Zoo | வண்டலூர் பூங்காவில் 11 நாள் சபாரி சேவைகள் ரத்து: காரணம் இதுதான்

Published On 2026-03-13 03:41 IST   |   Update On 2026-03-13 03:41:00 IST
  • சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது.
  • ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டுச் செல்கின்றனர்.

சென்னை:

சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன.

இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை 11 நாள் என்று சபாரி சேவைகள் ரத்து செய்யப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அவசர பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவும், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம் மற்றும் மான் சபாரி சேவை மார்ச் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை ரத்து செஊஅப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News