தமிழ்நாடு செய்திகள்

விளாத்திகுளம் அருகே சிறுமி துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்படவில்லை - காவல்துறை

Published On 2026-03-12 22:00 IST   |   Update On 2026-03-12 22:00:00 IST
  • உடற்கூராய்வு அறிக்கை, தடய அறிவியல் விசாரணை அறிக்கைக்கு பின்பே பாலியல் குற்றம் நிகழந்ததா என தெரியும்
  • சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்டோரை கைதுசெய்யக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து சிறுமியின் சடலம் முழுமையாக மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உடற்கூராய்வு அறிக்கை, தடய அறிவியல் விசாரணை அறிக்கைக்கு பின்பே பாலியல் குற்றம் நிகழந்ததா என தெரியும் என்றும்,  உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு குழப்பம், அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். 

Tags:    

Similar News