தமிழ்நாடு செய்திகள்

புராஜெக்ட் செய்ய வந்த இடத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமையா? விசாரணையில் அம்பலமான உண்மை

Published On 2026-03-12 17:12 IST   |   Update On 2026-03-12 17:12:00 IST
  • சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அம்பலம்
  • மார்பிங் செய்த ஆபாசப் படங்களை போனுக்கு அனுப்பி மிரட்டியதாக புகார்

திருச்சியில் இருந்து சென்னைக்கு புராஜெக்ட் செய்ய வந்திருந்த கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி பொய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், தனது படிப்பு தொடர்பான 'புராஜெக்ட் பணிக்காக சென்னை வந்தபோது மர்ம நபர்களால் மிரட்டப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அபிராம்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தொடங்கினர். இந்நிலையில் இந்த புகார் என பொய்யானது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

படிப்பில் சாியாக கவனம் செலுத்த முடியாத காரணத்தால், மன உளைச்சலில் இருந்த மாணவி இவ்வாறு புகார் அளித்ததாக தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பது தொியவந்துள்ளது.

 

Tags:    

Similar News