தமிழ்நாடு செய்திகள்
விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி- ஆ.ராசா
- நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
- வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை இபிஎஸ் தரம் தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மேலும் கூறியதாவது:-
செல்வப்பெருந்தகையை கீழ்தரமாக விமர்சித்து நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய விசுவாசம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகுதியும் இல்லை. வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.
விரக்தியின் விளிம்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.