நந்தனம் கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை- 3 பேருக்கு நீதிமன்ற காவல்
- சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- மூவருக்கு வரும் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆண் பெண் இருபாலரும் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் உள்ள உணவகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 56 வயது நபரான குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதே உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை குணசேகர் கல்லூரி வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் 5 பேரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டே கல்லூரியில் உள்ள காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, குணசேகரன் கைது செய்யப்பட்டார். உணவக உரிமையாளரான அரசியல் பிரமுகர் கோட்டூர் செல்வம், நண்பர் கார்த்திக் ஆகியோரும் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த கேண்டீன் உரிமையாளர் முத்து செல்வம், அவரது நண்பர் கார்த்திகேயன், மாஸ்டஸ் குணசேகர் ஆகிய மூவருக்கு வரும் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.