தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
- ரவுடியை பிடிக்கச் சென்றபோது போலீசாரை தாக்க முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ரவுடி தொப்பை கணேசன் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை மாதவரம் அருகே ரவுடி தொப்பை கணேசனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
மாதவரம் ரவுண்டானா அருகே ரவுடி தொப்பை கணேசனை பிடிக்கச் சென்றபோது போலீசாரை தாக்க முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 30-ந்தேதி வசந்தா என்பவரது வீட்டில் ரூ.25 லட்சம், 15 சவரன் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ரவுடி கணேசனை பிடிக்க முயன்றபோது தாக்க முயன்றதால் அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
ரவுடி தொப்பை கணேசன் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.