தமிழ்நாடு செய்திகள்

வரும் நாட்களில் கணிக்க முடியாத அளவிற்கு தங்கம் விலை உயரும்..! தங்கம்-வைர வியாபாரி சங்க தலைவர்

Published On 2026-01-29 18:18 IST   |   Update On 2026-01-29 18:21:00 IST
  • அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.
  • அமெரிக்க டாலரை அந்நிய செலவாணியாக கொண்டுள்ள நாடுகள் அதன் மதிப்பை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

தங்கம் விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு தங்கம் மற்றும் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:-

உலக நாடுகள் தங்களிடம் உள்ள அந்நிய செலவாணியான அமெரிக்க டாலரை தங்கமாக மாற்ற தொடங்கியதே இந்த விலை உயர்வுக்கு காரணமாகும். தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய முதல் காரணம்.

அமெரிக்காவின் பல நடவடிக்கைகள் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய தொடக்கமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.

ஒரு வேளை அமெரிக்க பொருளாதாரம் மந்தமானால் அமெரிக்க டாலரின் மதிப்பிழப்பு ஏற்படும். ஏற்கனவே அமெரிக்க டாலரை அந்நிய செலவாணியாக கொண்டுள்ள நாடுகள் அதன் மதிப்பை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

அதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் சமீபகாலமாக ஈரான் மீது போர் தொடுக்க வேண்டிய நோக்கத்தில் அமெரிக்கா போர்க் கப்பல்கள் சென்று கொண்டு இருக்கின்றன.

அது அங்கு சென்று போர் சூழல் ஏற்பட்டால் இன்னும் பெரிய அளவில் பாதிப்பை உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உலகப் பொருளாதாரம் பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தும் நிலை உருவாகும் எனக் கருதி பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலர்களை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள். இது 2-வது முக்கிய காரணமாகும்.

இந்த இரண்டும் ஒரு சேர நடைபெற்று வருவதால் சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை எந்த அளவிற்கு உயரும் என்று கணக்கிட முடியாத அளவிற்கு உயரும். தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் உயரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News