தமிழ்நாடு செய்திகள்
சிறுபான்மை மக்களின் உண்மை தோழன் தி.மு.க. அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- இயேசுபிரான் காட்டிய அன்பு வழியில் வாழும் சகோதரர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
- சிறுபான்மை மக்களின் உண்மைத்தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் திமுக அரசு செயல்படுகிறது.
உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
இயேசுபிரான் காட்டிய அன்பு வழியில் வாழும் சகோதரர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். சிறுபான்மை மக்களின் உண்மைத்தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் திமுக அரசு செயல்படுகிறது.
சிறுபான்மை மக்களின் தேவைகளை தீர்த்துவைக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
கிறிஸ்தவ சகோதரர்களின் உரிமை, வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி தரும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி தான் என்றுமே இந்த ஆட்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.