தமிழகத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள 202 போலீசார் மீதான நடவடிக்கை ரத்தாகிறது

439 பேர் சஸ்பெண்டு நடவடிக்கை காரணமாக போலீஸ் பணியில் இல்லாமல் உள்ளனர். சஸ்பெண்டு காலத்தில் வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஊதியமும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள 202  போலீசார் மீதான நடவடிக்கை ரத்தாகிறது
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் காவல்துறை பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டது மற்றும் கவன குறைவாக செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காக போலீசார் மீதும் அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

மாநிலம் முழுவதும் இதேபோன்று 439 பேர் சஸ்பெண்டு நடவடிக்கை காரணமாக போலீஸ் பணியில் இல்லாமல் உள்ளனர். அதே நேரத்தில் இவர்களுக்கு சஸ்பெண்டு காலத்தில் வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஊதியமும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக சஸ்பெண்டு நடவடிக்கையில் இருந்து வரும் 202 போலீசார் மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீஸ் டிஜிபி வெங்கட்ராமன், அனைத்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். இதன்படி நடவடிக்கையில் உள்ள 200க்கும் மேற்பட்ட போலீசார் பணிக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com