கிரிக்கெட் (Cricket)

முதல் முறையாக ஐசிசி பட்டத்தை வெல்ல இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு- டெம்பா பவுமா

Published On 2025-05-16 15:05 IST   |   Update On 2025-05-16 15:05:00 IST
  • லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம்.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11-ம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகிறது.

இதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா, பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் ஐசிசி பட்டத்தை வெல்ல இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் என தென் ஆப்பிரிக்கா வீரர் டெம்பா பவுமா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது ஐசிசி பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்த முக்கியமான விளையாட்டு வடிவத்திற்கு சூழலை வழங்குகிறது.

லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம். ஜூன் 11 ஆம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

என்று பவுமா தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News