கிரிக்கெட் (Cricket)

வங்கதேச போட்டியை சென்னை, திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமா? இந்திய கிரிக்கெட் வாரியம் பதில்

Published On 2026-01-13 10:26 IST   |   Update On 2026-01-13 10:26:00 IST
  • டி20 உலக கோப்பையில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
  • இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது.

புதுடெல்லி:

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக டி20 உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, திருவனந்தபுரம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செயலாளர் சைகியா கூறியதாவது:-

வங்கதேசப் போட்டிகளை சென்னைக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றுவது குறித்த எந்த தகவலும் பி.சி.சி.ஐ.க்கு வரவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஐ.சி.சி. மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான தகவல் பரிமாற்ற விஷயமாகும்.

ஏனெனில் ஐ.சி.சி.தான் ஆளும் அமைப்பு. இடமாற்றம் குறித்த முடிவை ஐ.சி.சி. எங்களுக்குத் தெரிவித்தால், பி.சி.சி.ஐ., தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது எங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News