சாய் சுதர்சன், சுப்மன் கில் அசத்தல்: 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது குஜராத்
- டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 199 ரன்களை குவித்தது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
அபிஷேக் பொரெல் 30 ரன்னும், அக்சர் படேல் 25 ரன்னும், ஸ்டப்ஸ் 21 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.
சாய் சுதர்சன் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணியின் 5வது தோல்வி இதுவாகும்.