ஐ.பி.எல்.(IPL)

WPL 2026: 11 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி- எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2026-01-30 23:04 IST   |   Update On 2026-01-30 23:04:00 IST
  • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வதோதரா:

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 46 ரன்னும், ஜார்ஜியா வேர்ஹாம் 44 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி 5-வது வெற்றியைப் பதிவுசெய்து எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.

ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 48 பந்தில் 82 ரன் குவித்து அவுட்டாகாமல் இருந்தார்.

குஜராத் அணி சார்பில் சோபியா டிவைன், ஜார்ஜியா வேர்ஹாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பெற்றுள்ளது.

Tags:    

Similar News