WPL 2026: குஜராத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது பெங்களூரு
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 182 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய குஜராத் அணி 150 ரன்களில் ஆல் அவுட்டானது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.
ராதா யாதவ் 66 ரன்னும், ரிச்சா கோஷ் 44 ரன்னும் எடுத்தனர்.
குஜராத் அணியின் சோபி டிவைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.
பெங்களுரு அணியின் ஷ்ரேயங்கா பாட்டீல் 5 விக்கெட்டும், லாரன் பெல் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.