ஐ.பி.எல்.(IPL)
WPL 2026: உ.பி.யை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத்
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 153 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்- உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபி டிவைன் 50 ரன்னில் வெளியேறினார். பெத் மூனி 38 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி.வாரியர்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே விக்கெட்கள் சீராக விழுந்தன.
இறுதியில், உ.பி.வாரியர்ஸ் அணி 17.3 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது.