ஐ.பி.எல்.(IPL)

நடின் டி கிளார்க் அதிரடி: கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி.

Published On 2026-01-09 23:26 IST   |   Update On 2026-01-09 23:26:00 IST
  • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய ஆர்.சி.பி. அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

மும்பை:

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் இன்று நவி மும்பையில் தொடங்கியது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு154 ரன்கள் எடுத்தது. சஜீவன் சஜனா 45 ரன்கள் எடுத்தார். நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் அடித்தார்.

ஆர்.சி.பி. அணி சார்பில் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் நடின் டி கிளார்க் தனி ஆளாக போராடி அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், ஆர்சிபி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடின் டி கிளார்க் 63 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags:    

Similar News