என் மலர்tooltip icon

    விளையாட்டு

    செர்ஜியோ பஸ்கெட்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஸ்பெயின் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது
    மாட்ரிட்:

    ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி வரை 11 நாடுகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராக ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் யூரோ போட்டிக்கான ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் செர்ஜியோ பஸ்கெட்ஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அணியினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அணியின் மற்ற வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஸ்பெயின் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 14-ந் தேதி சுவீடனை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் செர்ஜியோ பஸ்கெட்ஸ் ஆடுவது சந்தேகம் தான். 32 வயதான செர்ஜியோ ஸ்பெயின் அணிக்காக 120-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் 2010-ம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2012-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்ற பின்னர், மேலும் ஒரு பதக்கத்தை பெற முடியாமல் தவிக்கிறார் செரீனா வில்லியம்ஸ்.
    அமெரிக்காவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். இவர் கடந்த 1999-ம் ஆண்டு முதன்முதலாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து டென்னிஸில் ஜாம்பவானாக திகழ்ந்த இவர், இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடைசியாக 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனை கர்ப்பிணியாக இருந்தபோதே வென்றார்.

    குழந்தை பெற்ற பிறகு சிறிது காலம் விளையாடவில்லை. அவர் தற்போது வரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இன்னும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுவிட்டால், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அதிகமுறை வென்ற மார்கரெட் கோர்ட் (24) சாதனையை சமன் செய்துவிடுவார்.

    தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபனில் எப்படியும் சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21 வயதேயான இளம் வீராங்கனை ரிபாகினாவிடம் 6-3, 7-5 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.

    செரீனா வில்லியம்ஸ்

    பிரெஞ்ச் போனால் என்ன? விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். 23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபனை மூன்று முறை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா நியூசிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளனர் விமர்சகர்கள்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. அதேவேளையில் இங்கிலாந்து சீதோஷ்ண நிலை நியூசிலாந்து அணிக்கு ஏற்றதாக இருக்கும்.

    இதனால் முதன்முறையாக நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்ற இந்தியாவை விட நியூசிலாந்துக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.


    இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ரகானே, புஜாரா அபாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் சவுத்தாம்ப்டன் சீதோஷ்ண நிலை ஸ்விங், சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், விராட் கோலி திணற வேண்டிய நிலை ஏற்படும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி

    இதுகுறித்து க்ளென் டர்னர் கூறுகையில் ‘‘விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தின் வேகம் குறைந்து விட்டதாக நான் யூகமாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஆடுகளம், ஒட்டுமொத்த சீதோஷ்ண நிலை ஸ்விங் மற்றும் சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், நியூசிலாந்தில் திணறியதுபோல், இங்கும் திணற வேண்டிய நிலை ஏற்படலாம்.


    மீண்டும் ஒருமுறை சீதோஷ்ண நிலை முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், சொந்த இடத்தில் விளையாடும்போது பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். டெக்னிக் மற்றும் திறமையில் குறிப்பிடத்தகுந்த பகுதியாக விளங்குவார்கள்.

    க்ளென் டர்னர்

    இந்தியாவில் சில வருடங்களாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நியூசிலாந்து சூழ்நிலையுடன் இந்திய சூழ்நிலையை ஒப்பிட இயலாது. கடந்த முறை இந்திய அணி நியூசிலாந்து சென்று விளையாடும்போது அது வெளிப்பட்டது. இங்கிலாந்து சீதோஷ்ண நிலை நியூசிலாந்து அளவிற்கு ஒத்துப்போவதாக இருக்கும்’’ என்றார்.
    டி20 உலகக்கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
    இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டியை இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்திடம் பிசிசிஐ போட்டியை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதற்கிடையில் உலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை ஆகியவற்றிற்கு இடையில் நான்கு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.

    உலகக்கோப்பைக்காக ஐசிசி-யிடம் மைதானத்தை 15 நாட்களுக்கு முன் ஒப்படைக்க வேண்டும். இதனால் ஐபிஎல் போட்டியை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும். மேலும் ஷார்ஜா, அபு தாபி, துபாய் ஆகிய மூன்று மைதானங்களே உள்ளன. ஆடுகளங்கள் விளையாட விளையாட தொய்வுடைந்துவிடும்.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு போட்டியை இலங்கையில் நடத்ததலாமா? என்ற சிந்தனையும் பிசிசிஐ நினைப்பில் ஓடியது. இதுகுறித்து பிசிசிஐ- இலங்கை கிரிக்கெட் போர்டு ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.

    டி20 உலகக்கோப்பை

    இலங்கையில் உலகக்கோப்பை தொடரை நடத்தினால், மைதானத்தை ஒப்படைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என பிசிசிஐ நினைத்திருக்கலாம்.

    இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொழும்பில் மட்டும் மூன்று சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளது.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்சமீபத்தில் இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.

    34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். 30 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இந்திய மண்ணில் 24 முறையும், வெளிநாட்டில் 6 முறையும் இதை சாதித்து உள்ளார்.

    7 தடவை ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். சமீபத்தில் இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அஸ்வின் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்தநிலையில் அஸ்வின் எக்காலத்திற்கும் தலை சிறந்த பந்து வீச்சாளர் என்று அழைப்பதில் சிக்கல் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வின் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய ஆடுகளங்களில் அஸ்வினுக்கு இணையாக விக்கெட் வீழ்த்தும் திறமையை ஜடேஜா பெற்றிருக்கிறார்.

    மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஸ்வினை காட்டிலும் அக்‌ஷர்பட்டேல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதுவே அஸ்வினை எல்லா கால கட்டத்துக்கும் தலைசிறந்த வீரர் என்று அழைப்பதில் எனக்கு இருக்கும் பிரச்சினையாகும்.

    இவ்வாறு மஞ்சுரேக்கர் கூறி உள்ளார்.

    மஞ்சுரேக்கரின் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    அஸ்வின் மிகச்சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் லயனை விட அவர் சிறந்த வீரர் ஆவார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஜோல் கார்னர் அச்சுறுத்தும் பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் அவர் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளாரா?

    என்னை பொறுத்தவரை அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 2 மணி 13 நிமிடம் 36.410 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.
    பாகு:

    இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள பாகு ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.049 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

    இதில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 2 மணி 13 நிமிடம் 36.410 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். பார்முலா1 கார்பந்தயத்தில் அவர் வசப்படுத்திய 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 1.385 வினாடி பின்தங்கிய செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 2-வதாகவும், பியரே கேஸ்லி (பிரான்ஸ்) 3-வதாகவும் வந்தனர். 7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தாலும் பிரேக் பிரச்சினையால் நேரம் விரயமானதால் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு முன்னணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பெனின் (நெதர்லாந்து) கார் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதால் பாதியிலேயே வெளியேற நேரிட்டது.

    ஆனாலும் 6 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் வெர்ஸ்டப்பென் 105 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹாமில்டன் 101 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செர்ஜியோ பெரேஸ் 69 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 7-வது சுற்று போட்டி பிரான்சில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் இந்தியா, நியூசிலாந்து இடையே நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    உலகடெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் முதல் டெஸ்டில் தோற்றாலும், அடுத்த இரு டெஸ்டில் சரிவில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடி வருவதால் அந்த வகையில் இந்தியாவை விட அவர்களே ஒரு படி மேலே இருப்பார்கள்.

    பேட்டிங்கில் ஒப்பிடும்போது நியூசிலாந்தை விட இந்தியாவின் பேட்டிங் வரிசை வலுமிக்கது. ரோகித் சர்மா இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவசாலியாக மாறி விட்டார். ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் இணைந்து இங்கிலாந்து மண்ணில் தொடக்க ஆட்டக்காரராக ஆடியதில்லை. டியூக்ஸ் வகை பந்து ஆரம்பத்திலேயே ஸ்விங் ஆகும் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி சீக்கிரமாக பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இங்கிலாந்து மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது காலையில் ஆடுகளம் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும். ஸ்விங் ஆகும். மதியத்துக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் திரட்ட முடியும். தேனீர் இடைவேளைக்கு பிறகு பந்து மீண்டும் ஸ்விங் ஆகும். ஒரு பேட்ஸ்மேனாக இந்த விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டால் வெற்றிகரமாக செயல்பட முடியும் எனதெரிவித்துள்ளார்.
    லார்ட்ஸ் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
    லண்டன்:

    இங்கிலாந்து - நியூசிலாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.

    முதல் இன்னிங்சில் அந்த அணி 378 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே 200 ரன்கள் அடித்து அறிமுக போட்டியிலேயே அசத்தினார். 

    மேலும் இங்கிலாந்து அணி சார்பாக அறிமுக வீரரான ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் பவுன்சர் போன்றவற்றைச் சிறப்பாக வீசி ஒல்லி ராபின்சன் இங்கிலாந்து ரசிகர்களை வியக்கவைத்தார். இதனால், இணையத்தில் ராபின்சன் குறித்த பேச்சுக்கள் அதிகரித்தன. ஒரு சிலர் இங்கிலாந்து அணியின் எதிர்கால நட்சத்திர வீரர் என புகழ்ந்து தள்ளினர். ஆனால் அந்த புகழ்ச்சிகள் அன்றைய தினம் மாலை வரை கூட நிலைக்கவில்லை. இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட டுவீட்தான் தான் என தெரியவந்தது.

    8 வருடங்களுக்கு முன்பு சில டுவீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த டுவீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது. 

    இந்நிலையில், ஒல்லி ராபின்சன் டுவீட் போட்டது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் 8-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் காயத்தால் விலகியுள்ளார்.
    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் 39 வயதான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், 21 வயதான கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும் மோதினர்.

    முதல் செட்டை ரிபாகினா 6-3 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ரிபாகினாவிடம் செரீனா போராடினார். ஆனால் இரண்டாவது செட்டையும் ரிபாகினா 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
      
    இறுதியில், ரிபாகினா  6-3, 7-5 என்ற நேர் செட்களில் செரீனாவை எளிதில் வீழ்த்தி காலிறுக்கு முன்னேறினார்.
    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் சிப்லி அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    லண்டன்:

    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது.

    இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அறிமுக வீரர் டிவான் கான்வே அபாரமாக ஆடி (200 ரன்) இரட்டை சதம் விளாசி அவுட்டானார். நிக்கோல்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 101.1ஓவரில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 42 ரன், ஒல்லி போப் 22 ரன், ஒல்லி ராபின்சன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்து 132 ரன்னில் வெளியேறினார்.

    நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டும், ஜேமிசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    ஆட்டநாயகன் விருது பெற்ற டேவன் கான்வே

    இதையடுத்து, 103 ரன்கள் கூடுதல் பெற்ற நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. லாதம் 30 ரன்னுடனும், நீல் வாக்னர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதுவரை நியூசிலாந்து அணி 165 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நியூசிலாந்து வீரர்கள் ரன்கள் சேர்த்தனர். அந்த அணி 52.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தபோது டிக்ளேர் செய்தது. லாதம் 36 ரன்னும், ராஸ் டெய்லர் 33 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 70 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சிப்லி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் ஜோ ரூட்40 ரன்னில் அவுட்டானார்.

    இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது. ஆட்ட நாயகனாக அறிமுக போட்டியில் இரட்டை சதமடித்து அசத்திய டேவன் கான்வே அறிவிக்கப்பட்டார்.

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் 10ம் தேதி பெர்மிங்காமில் நடைபெறுகிறது.
    உலகின் 8-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், பிரெஞ்ச் ஓபன் 3-வது சுற்றில் கடும் போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ரோஜர் பெடரர். 39 வயதான உலகின் 8-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் கடந்தத சில வருடங்களாக காயம் காரணகமாக தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலையில் இருந்து வருகிறார்.

    மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகியுள்ளார்.

    விலகுவது குறித்து ரோஜர் பெடரர் கூறுகையில் ‘‘இரண்டு முறை மூட்டு அறுவை சிகிச்சை செய்த பிறகு, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், என்னுடைய உடல்நலம் குறித்து கவனிப்பது முக்கியமானது. காயம் குணமடைவதற்காக எனக்கு நானே அவசரப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதை உறுதி செய்வதும் முக்கியமானது’’ என்றார்.
    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 275 ரன்னில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து 2-வது இன்னிங்சை 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    4--வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தில் 275 ரன்னில் சுருண்டது. 103 ரன்கள் முன்னிலைப் பெற்ற நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூசிலா்நது 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி 272 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் 75 ஓவர்கள் மட்டுமே உள்ளது.

    இங்கிலாந்து 75 ஓவர் வரை தாக்குப்பிடித்தால் போட்டி டிரா ஆகும். ஒருவேளை அதிரடியாக விளையாடிவிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. போட்டி டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.
    ×