search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, ரோகித் சர்மா
    X
    விராட் கோலி, ரோகித் சர்மா

    இந்த ஒரு விசயம் விராட் கோலி, ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பாதிக்கலாம்: திலிப் வெங்சர்க்கார் சொல்கிறார்

    விராட் கோலி, ரோகித் சர்மா பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் இருப்பது ஐசிசி உலக டெஸ்ட் சாமபியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர்களுக்கு பாதகமாக இருக்கும் என திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் வருகிற 18-ந்தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா 4 செசன் பயிற்சி மட்டுமே மேற்கொள்ள இருக்கிறது.

    பயிற்சி ஆட்டம் ஏதுமில்லை. இந்திய அணி ஐபிஎல் போட்டியில் விளையாடிய பின்னர் நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    இருந்தாலும் போதுமான அளவிற்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தேர்வாளர் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘விராட் கோலி நீண்ட காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் அவர்களுடைய ஆட்டத்திற்கும், இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த வகையிலும், ஏராளமான பெருமையை பெற்றிருப்பார்கள்.


    இருவரும் சிறந்த பார்மில் இருப்பது சிறந்த விசயம்தான். இருந்தாலும், போதுமான பயிற்சி இல்லாதது, இவர்களுடைய சிறந்த லெவல் ஆட்டத்தை பாதிக்கும். இந்தியா சிறந்த அணி. சிறந்த பார்மில் உள்ளது. மிகப்பெரிய அளவில் இல்லாத நியூசிலாந்து அணிக்கு, இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடுவது சாதகமாக இருக்கும்.

    திலிப் வெங்சர்க்கார்

    இந்தியா ஒன்றிரண்டு போட்டி கிரிக்கெட்டிலாவது விளையாடியிருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடினால், சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்ள சாதகமாக இருக்கும்.’’ என்றார்.
    Next Story
    ×