'ரியல் எஸ்டேட்ல நல்லா காசு பாக்கலாம்'.. ரூ.400 கோடியை சுருட்டிக்கொண்டு கம்பிநீட்டிய திருடா திருடி
- ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர்.
- இந்த மோசடிவேலையில் தந்தையும் உடந்தை என்று தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கணவனும் மனைவியும் கூட்டாக சேர்ந்து மாணவர்கள், வியாபாரிகள், வக்கீல்கள், இல்லத்தரசிகள் என வகைதொகை இல்லாமல் பலரை ஏமாற்றி ரூ.400 கோடி வரை திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது.
நிகாரிகா வென்டியூர்ஸ் என்ற போலி நிறுவனத்தை நடத்தி வந்த அபிஷேக் திவேதி அவரது மனைவி நிஹாரிகா ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த மோசடி வேலையில் அபிஷேக்கின் தந்தை ஓம் பிரகாஷும் உடந்தை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூவர் மீதும் போலீசார் FIR பதிந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிகாரிகா நிறுவனம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று நண்பர்கள் உறவினர்கள் என சுமார் 200 பேர் வரை ஏமாற்றியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.