இந்தியா

VIDEO: திறக்காத கதவுகள்.. கோபத்தில் ரெயிலின் கதவு-ஜன்னல்களை அடித்து உடைத்த பயணிகள்

Published On 2024-12-21 13:58 IST   |   Update On 2024-12-21 13:58:00 IST
  • மும்பை செல்லும் அந்தியோதயா விரைவு ரெயிலின் [15101] கதவுகள் வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்தது
  • கற்களால் கதவின் கண்ணாடியை உடைத்தும், ஜன்னல் கண்ணாடியுடன் இருந்த இரும்புக் கம்பியை வளைக்கவும் முயன்றுள்ளனர்.

ஸ்டேஷனில் வந்து நின்று ரெயிலின் கதவை திறக்காததால் பயணிகள் ஆத்திரத்தில் ரெயிலை சூறையாடிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி ரயில் நிலையத்தில், கோபமடைந்த பயணிகள் அந்தியோத்தியா எக்ஸ்பிரஸ் ரயிலை சேதப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

மும்பை செல்லும் அந்தியோதயா விரைவு ரெயிலின் [15101] கதவுகள் வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே ஏறி சீட் பிடிக்க காத்திருந்த பயணிகள் பொறுமை இழந்தனர்.

இதனால் கற்களால் கதவின் கண்ணாடியை உடைத்தும், ஜன்னல் கண்ணாடியுடன் இருந்த இரும்புக் கம்பியை வளைக்கவும் முயன்றுள்ளனர்.

ஒரு பயணி கையிலிருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து, ரயிலின் மூடிய கதவின் கண்ணாடியை உடைக்க அதைப் பயன்படுத்துவதும் மற்றவர்கள் ஜன்னல் கண்ணாடியின் இரும்பு கம்பியை அகற்றுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News