இந்தியா

பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

Published On 2026-03-05 23:57 IST   |   Update On 2026-03-05 23:57:00 IST
  • கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
  • மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஆனந்த போஸ் பதவி விலகினார். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

புதுடெல்லி:

தமிழ்நாடு ஆளுநர் உள்பட பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

மேற்கு வங்கம் - ஆர்.என்.ரவி

தெலுங்கானா - ஷிவ்பிரதாப் சுக்லா

மகாராஷ்டிரா - ஜிஷ்ணு தேவ் வர்மா

நாகாலாந்து - நந்து கிஷோர் யாதவ்

பீகார் - சையத் அடா ஹஸ்னன்

இமாசல பிரதேசம் - கவிந்தர் குப்தா

டெல்லி - தரன்ஜித் சந்து

லடாக் - வினய் குமார் சக்சேனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஆனந்த போஸ் பதவி விலகினார். இந்த நியமனங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News