இந்தியா

ஆசுவாசம்... கமேனியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது இந்தியா!

Published On 2026-03-05 17:21 IST   |   Update On 2026-03-05 17:21:00 IST
  • ஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய கூட்டுத் தாக்குதலில் கமேனி உயிரிழந்தார்.
  • இந்திய அரசின் சார்பில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார் விக்ரம் மிஸ்ரி.

ஈரானின் உச்சத் தலைவர் கமேனியின் மறைவிற்கு 6 நாட்களுக்குப் பிறகு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் சார்பாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று டெல்லியில் உள்ள ஈரான் தூதரகதிற்குச் சென்று ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கான இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

மத்திய கிழக்கில் மோதல் வெடித்ததில் இருந்து இந்தியா அமைதி காத்து வந்தது. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு மட்டும் ஈரானுக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் நேற்று இந்தியப் பெருங்கடலில் வைத்து ஈரானின் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

அதற்கும் இந்திய தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தநிலையில், தற்போது இந்தியத் தரப்பில் கமேனி இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் உடனடியாக கண்டனமோ, இரங்கலோ தெரிவிக்காவிடினும் அலி கமேனியின் மறைவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள், குறிப்பாக ஷியா முஸ்லிம் சமூகத்தினர் கடும் துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

 

Tags:    

Similar News