போர் சூழல் எதிரொலி: ரஷியாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்
- ரஷியாவிடம் இருந்து நாளொன்றுக்கு 14 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்க முடிவு.
- பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை.
போர் சூழல் காரணமாக ரஷியாவில் இருந்து கூடுதல் அளவு கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இந்தியாவிடம் கையிருப்பு உள்ள நிலையில் ரஷியாவிடம் கூடுதலாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை மட்டுமே நம்பி உள்ளதால் ரஷியாவிடம் இருந்து கூடுதலாக வாங்க முடிவு செய்துள்ளது.
தற்போது ரஷியாவிடம் இருந்து 40 சதவீதம் அளவிற்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில் அதன் அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரான்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வருவது பாதிக்கப்பட்டதால் புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்தியா புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷியாவிடம் இருந்து நாளொன்றுக்கு 14 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிறநாடுகளை விட ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் குறைந்த விலையில் வாங்குவதால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.