VIDEO: அரசு மருத்துவரால் தாக்கப்பட்ட 70 வயது முதியவர்.. தரையில் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்
- உத்தவ் லால் ஜோஷி என்ற முதியவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் சிகிச்சைகாக வந்திருந்தார்..
- வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர் முதியவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
ஏப்ரல் 17 அன்று நடந்த இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உத்தவ் லால் ஜோஷி என்ற அந்த முதியவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்.
மற்ற அனைவரையும் போல வரிசையில் நின்றிருந்தபோது எதிர்பாராத விதமாக மருத்துவர் வந்து தன்னைத் தாக்கியதாக அவர் கூறுகிறார்.
அவர் ஊடகத்திடம் கூறியதாவது, ஏன் வரிசையில் நிற்கிறீர்கள் என்று மருத்துவர் கூச்சலிட்டார். விளக்க முயற்சிக்கும்போது மருத்துவர் தன்னை தாக்கி வெளியே இழுத்துச் செல்ல முற்பட்டார் என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.