இந்தியா

முதல்வர் நாற்காலிக்கு போட்டி: அமித்ஷாவுடன் தொடர்பா? - டி.கே. சிவகுமார் விளக்கம்

Published On 2025-11-23 07:48 IST   |   Update On 2025-11-23 07:48:00 IST
  • கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
  • தானே முதல்வராக தொடருவேன் என சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.

இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அமித்ஷாவுடன் டிகே சிவகுமார் தொடர்பில் இருப்பதாக பரவிய தகவல் கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அமித்ஷாவுடன் தாம் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் புகாரை டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். 

Tags:    

Similar News