அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கொடுத்த அப்டேட்
- இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
- இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இருநாடுகளுக்கும் சாதகமான சூழலில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.