இந்தியா

VIDEO: ஓடும் ரெயிலுக்குள் 'பைக்' ஓட்டிய வாலிபர்

Published On 2025-06-07 11:36 IST   |   Update On 2025-06-07 11:36:00 IST
  • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டனர்.
  • வீடியோ ரீல்சுக்காக எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.

பொதுவாக ரெயில்களுக்குள் பைக்குகள், சுழற்சி வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பைக்குகளை விதிமுறைகளை பின்பற்றி பார்சல் மூலம் தொலை தூரங்களுக்கு அனுப்ப முடியும். இந்நிலையில் ஓடும் ரெயிலுக்குள் பயணிகள் அமர்ந்திருக்கும் பெட்டியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பீகாரின் சக்தி என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வாலிபர் பைக்கில் அமர்ந்து கொண்டு ஓட்டுவது போல காட்சிகள் உள்ளது. அதனை ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இந்த சம்பவம் பாட்னாவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டனர். இந்த வீடியோ ரீல்சுக்காக எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.



Tags:    

Similar News