இந்தியா
ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ரூ.2.5 லட்சம் அபராதம்
- ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்ந்து சைரன் சத்தம் எழுப்பியபோதும் கார் ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தடுத்தார்.
ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆம்புலன்சை தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து போலீசார் ரத்து செய்தனர்.
மேலும் அந்த நபருக்கு போக்குவரத்து ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.