இந்தியா

பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக வாக்களித்தேன்.. குடும்பத்துடன் வாக்களித்த பின் கெஜ்ரிவால் பேட்டி

Published On 2024-05-25 07:55 GMT   |   Update On 2024-05-25 13:15 GMT
  • வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.
  • டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, ஹரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்துள்ள ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா மற்றும் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுக்கு வாக்களித்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், எனது தந்தை, மனைவி மற்றும் எனது குழந்தைகள் இருவரும் வாக்களித்தனர். எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இன்று வர முடியவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

மேலும் வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார். கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் ஜூன் 1-ம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

Similar News