இந்தியா

ரூ.1.5 கோடிக்கு கணவனை மற்றொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுத்த மனைவி

Published On 2026-02-17 01:30 IST   |   Update On 2026-02-17 01:30:00 IST
  • 42 வயதான மத்திய அரசு ஊழியர் உடன் பணிபுரியும் 54 வயது பெண்ணை காதலித்தார்.
  • அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

மத்தியப் பிரதேசத்தை சேர்த்த 42 வயதான மத்திய அரசு ஊழியர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவர் தன்னுடன் பணிபுரியும் 54 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதனால் குடும்பத்தை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் மனைவி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.  

நீதிமன்றம் மூன்று பேரையும் அழைத்து ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், கணவர் தனது காதலியுடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். எனவே நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து அளித்தது.

ஆனால் மனைவி தனது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பதிலாக தனது கணவரை விட்டுக்கொடுக்க ரூ.1.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று அப்பெண்ணிடம் கோரினார். அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

கணவன் மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வீடு, மற்றும் ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.1.5 கோடியை காதலி வழங்க உள்ளார்.

Tags:    

Similar News