இந்தியா

SIR-க்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை

Published On 2025-11-19 12:03 IST   |   Update On 2025-11-19 12:03:00 IST
  • கேரள அரசு வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
  • நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி கவாய் ஒப்புக்கொண்டார்.

கேரள அரசு இந்திய தேர்தல் ஆணையத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

SIR நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாக்கல் அவசரமாக பட்டியலிடக்கோரி தாக்கல் செய்த மனுவை இந்திய தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன் எடுத்துரைத்தார்.

அப்போது, கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று வருவதாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் ஆணையத்தை நடத்துவது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி கவாய் ஒப்புக்கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR-ஐ ஒத்திவைக்க கேரள அரசும் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News