இந்தியா
ஜாலியாக பேட்மிண்டன் விளையாடிய சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்
- 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
- விஜய் கார்த்திக் ஜாலியாக பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உறவினர் வீட்டில் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும் போது, டிரான்ஸ்ஃபார்மரின் மீது விழுந்த ஷட்டில் கார்க்கை எடுக்க முயற்சித்த போது 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது பெற்றோர் உடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.